Friday, August 10, 2012

என் கவிதையே... (பகுதி - 3)

வெண்பட்டுச் சிறகுடுத்தி
என்னருகில் நீ வந்தால்..
என் கண் பட்டு
போகுததடி உன் அழகில்...

உன் அழகில் மயங்கி, கிரங்கி,
தயக்கத்திலே 3 மாதம் கரைந்து
உன்னிடம் இதற்க்கு மேல் மறைக்க முடியாமல்
கூற எத்தனித்த தருணம் கண்டுகொண்டேன்,
உன்னிடம் உன் மனதில் நீ
புதைத்த எனக்கான என் இடத்தை…

இதற்க்கு பேர் தான் உண்மையான நட்பா?
அல்லது காதலா?
உறவுக்கு பேர் தெரியாமல் வைத்தோம்
ஒரு பெயரை – “ஜுலை 18“ என்று!
இது என்ன தினம் என்று நாம் அறியோம்..
ஆனால் நிச்சயமாக,
இது நமக்கே நமக்கென நம்மால்
உருவாக்கப்பட்ட ஒரு சுதந்திரம்…
நாம் வாழ்வில் மிகச் சிறந்த தினம்..!

அதன் பின் எல்லாம் சுகமே…
இத்துடன் முடிந்ததா இந்த க(வி)தை??

காத்திரு தோழி…

No comments:

Post a Comment