Friday, August 10, 2012

வலி...

வலியே..
என் மனதை உன் கருநிழல் கொண்டுத் தீண்டி
கொஞ்சம் கொஞ்சமாய் உன் விஷத்தை படர விடுகிறாய்..

பண்டம் தின்று உயிர் வளர்க்க நீ என்ன
கடவுள் படைத்த உயிரினமா?
அதுதான் என் கண்ணீர் தின்று உன் நாட்கள் வளர்க்கிறாய்..

மோதலில் தொடங்கி காதலில் முடியும்
அறுவது வருட தமிழ் திரைப்படங்களை போல்
என்னுள் இருந்து உன்னை விரட்ட நினைத்து
உன்னையே இறுக கட்டிக் கொள்கிறேன் இப்போது..

வலியே, நீ இத்தனை சுகமானவளா..??

No comments:

Post a Comment