Friday, July 27, 2012

என் கவிதையே... (பகுதி - 2)

பிடிக்குதடி உன்னை..
உன் முகம், உன் குரல்,
உன் கண்கள், உன் உதடுகள்,
உன் கூந்தல், உன் பின்னல்,
உன் எல்லாம் எல்லாம்
எல்லாவற்றுக்கும் மேலாக
நீ நீயாக இருப்பது பிடிக்குதடி..

உன்னை கண்டு, ரசித்து,
நாட்கள் களிப்பினும்,
உன்னிடம் நட்பு கொள்ள,
உன்னோடு பேசி மகிழ,
கனவு கண்டு கண்டு
முகூர்த்தம் நோக்கி
காத்திருந்தேன்..

காதலில் மட்டும் தான் தயக்கம் உண்டா??
நட்பிலும் உண்டே..
இல்லை??
நான் உன்மேல் கொண்டது
நட்டிபின்றி காதலா??

நாட்போ, காதலோ..
நினைவுகளை புரட்டிப் பார்க்கையில்...

உனக்கான என் நட்பை எனக்கு முதன் முதலில்
உணர்த்தியது நாம் சென்ற
Personality Development கூட்டம் தான்…

உன்னுடன் இருந்த அந்த சில நாட்கள்,
என்னை நானே என் கண் கொண்டு பார்த்தேன்…
ரசித்தேன் உன்னை அன்று….

அப்போது என் மனம் திறக்க தடையாய் இருந்தது
என்ன என்று எவ்வளவு யோசித்தாலும்
நினைவிற்க்கு வரவில்லை..
ஒன்றுமே இல்லாதது தான் காரணமா?
என்றும் இதுவரை தெரியவில்லை..??!!

Wednesday, July 25, 2012

என் கவிதையே... (பகுதி - 1)

இரண்டும் கெட்டான் பருவம்..
நல்லது, தீயது;
சரி, தவறு;
எதை பற்றியும் கவலை இல்லா பருவம்..

பிடிக்காதத்தை, பிடித்தவர்களுக்காக,
பிடித்தது போல் பிடிக்காமல் நடிப்பது
என்பது ஒரு கலை..
அந்த கலையில் கை தேர்ந்து,
முதுகலை பட்டம் பெற்றவர் யார்?
வேறு யார்??
நான் தான்..!

பனிரெண்டு வருடங்களாய்
அகர வரிசை முதல், வேதியல் செயல்முறை வரை
மனதிற்க்கு பிடித்த பள்ளியில்
துள்ளி திரிந்து பாடம் கற்ற நான்,
குடும்ப சூழல் காரணமாய்
மேனிலை படிப்புக்காக,
துளி ஆர்வம் இல்லாமல்
வந்து சேர்ந்தேன் இங்கு..

தமிழில் பேசினாலே கொக்கரிக்கும்
பள்ளியில் இருந்து வந்த நான்,
ஆங்கிலத்தில் பேசினால் கேலியாய் சிரிக்கும்
இடத்திற்க்கு வந்து சேர்ந்தேன்..

ஓரிரு பெண்கள் சேர்ந்தாலே
பிரளயம் ஏற்படும் எனில்,
அறுவது மகளிர் படிக்கும் அறையில்
நடுவில் இருந்தும், மூலையில் தள்ளப் பட்டேன்..

மனதில் வெம்பி ஆரம்ப நாட்களை கழித்து,
ஓரிரு தோழிகள் சேர்த்து,
என்னுடன் இரட்டை பிறவி போல்
பிறந்த திமிருடன், 
புதிய மாணாவிக்கே உரிய ஆணவமும் சேர்ந்து
அராஜகம் செய்தேன்..

வாரம் முழுவதும் வகுப்பில் பிறருக்கும்,
ஆசிரியர்கும் தொல்லை கொடுத்து,
படிப்பிலும் சளைக்காது,
தனி ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டேன்..
சனிக்கிழமை விடுமுறையான பள்ளி,
என் வீட்டில் மட்டும் திறந்திருக்கும்..
வீட்டில் நான் பள்ளியில் இருக்க,
நானோ திரையரங்கில்...

ஒரு படம் விடாது,
ஒரு சந்தர்ப்பம் நழுவாது,
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்
நேற்றைய பற்றி சிந்திக்காது,
நாளைய பற்றி கவலை கொள்ளாது,
அனுபவித்து கரைத்தேன்..

யாரையும் மதித்தது இல்லை...
யாருக்கும் பயந்தது இல்லை..
விதிவிலக்கிற்க்ககே விதிவிலக்கு இருக்கும் போது?
நான் மட்டும் என்ன?

என் வாழ்வில் தென்றலாய் வந்தாள்
என்று கவிதைக்கூற்றாக அல்லாமல்,
நட்சத்திரங்களினுள் பௌர்ணமியாய்
காட்சி தந்தாள் - என் அவள்...

அவள்... அவள் தான் இந்த க(வி)தையின் நாயகி,
என் வாழ்வின் நாயகியும் கூட...
!!

Monday, July 23, 2012

அமுதும் நஞ்சும்

காதலை போல் இனிமையான அமுதும்,
கொடுமையான நஞ்சும் பூமியில் ஏது..??

தன்னிலை மறக்கச் செய்யும் காதல்,
சமயத்தில் தன்னையே வெறுக்கவும் வைக்கும்..
காதல் இத்தனை கசப்பானதா?
உயிரில் கலந்த உணர்வை மட்டும்
பிரிக்கும் கருப்பு அன்னப் பட்சி - காதல்..
காதல் எப்போதும் வித்தியாசமானது...

இரு உயிர்களை இணையச் செய்யும் காதல்,
பிரிக்கவும் செய்யும்...

குடும்பங்களுக்குள் குழப்பம் இல்லா காதல்
நாம் இருவரும் மட்டும் பிரிந்து
தனிமையில் வாடுவதென்ன..??

நீ நான் என்பது தொலைந்து
நாம் ஆவது என்றோ..??
காதல் என்ற வார்த்தை வாழ்க்கையாய் மாறுவது என்றோ..??

Wednesday, July 18, 2012

என் கவிதையே... (தொடர்ச்சி...)


அந்த 30 நிமிடங்கள்..
30 நிமிடங்களில் எத்தனை சுகம் தந்தாய் கண்ணே..
மிகக் சரியாக 2 வாரங்களாய் காத்திருந்த நொடிகள்..
நம்மை தெரிந்தோர், தெரியதோர்,
அறிந்தோர், அறியாதோர்,
மற்றார், சுற்றார்,
அத்தனை பேரும் வியந்து,
அதிசயித்து, பொறாமையில் நின்ற தருணங்கள்..

இதயம் கனக்க,
கண்கள் பனிக்க உன்னை கட்டி அணைத்து,
முத்தமிட்ட தருணங்கள்..
நிற்கின்றதடி..
நெஞ்சில் பசுமையாய்..

உன்னை காணும் வரை,
எத்தனை எத்தனையோ வார்த்தைகள்
ஊற்றெடுத்து இதயத்தில் திரண்டிருக்க,
7 வருடங்களுக்கு பிறகு நம் நாளில்
உன்னை கண்டவுடன் எல்லா அக்ஷரங்களும்
உதடுகளில் இருந்து உருண்டோடி,
மனதிர்க்குள் தஞ்சமடைந்து
பின் மறந்தே போனதடி...

என்னை தேடி வந்த பைங்கிளி...
உன் குறும்பு முகத்தை,
கரு விழிகளை, இமை மூடாமல்
பார்த்துக் கொண்டே இருத்தல் என்ன ஆனந்தம்???

7 வருடங்கள் முன்பு
முதன் முதலில் நாம் பகிர்ந்து கொண்டாடிய
அந்த தினத்தை அந்நாளைப் போலவே இன்றும்
வார்த்தையால் வசமாகா உணர்ச்சியில்
நிறைந்து, திளைத்து,
பாதம் தரை பட்டும்
மேலெழும்பிப் பறக்கிறேன்..
என்னை பற்றி என்ன நினைப்பர் என்பது யோசிக்காது,
பிள்ளை வண்ண ரோஜா போல் முகம் மலர்ந்து,
புன்னகையாலே கழிக்கிறேன் இன்று...!!

Tuesday, July 17, 2012

என் கவிதையே.. (முன்னுரை)

இது கவிதை அல்ல..
என் வாழ்வின் மிகச் சிறந்த
கவிதையை பற்றி என் பார்வையால் ஆன ஒரு பகுதி..

இந்த பகுதியில் தழும்ப தழும்ப நிறைந்திருக்கப் போவது
என் அவள் தான் என்றாலும்,
இந்த எண்ணத்திற்கு  உந்துதலாய்  இருந்தது
என் அலுவலக முன் மாதிரியாகவும்,
சிறந்த தோழியாகவும் இருக்கும் என் தமக்கை..
அவரின் ஒரு படைப்பு தான் என்னை இந்த பகுதி எழுதத்  தூண்டியது..
குளிர்ந்த நிலவுக்கு நன்றி...
இனி துவங்குவோமா?
என் வலைப்பதிவை  அழகாக்கப் போகும்
என்னவளுக்கு..
எங்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமான
இந்த நாளில் துவங்குகிறேன்
என் சிறிய பரிசை...
என் செல்ல ராட்சஸி...
என்னை தன் ஓர விழி பார்வையால் தன் புறம் ஈர்த்து,
என் உயிரை தன்  அன்பெனும்  மாய வலையில் வீழ்த்தி,
தன் வசமாக்கிக்  கொண்டவளே..
இந்த பகுதி உனக்கே உனக்காக மட்டும்,
உன்னை பற்றிய என் தோழமையை,
என் காதலை, என்னால் முடிந்த வரை,
தமிழால் முடிந்த வரை..
உயிர் ஓவியம் தர ஆசைப்படுறேன்..
அதுவரை காத்திரு தோழி...

Wednesday, July 11, 2012

Lovely Girl...

Crunchy Frenchy Fry,
My Yummy Choco Pie...
We wander about so loose,
Putting all other things in Snooze...
The so-called innocent smile on your face,
Makes me forget your pranks, in all the case...
My sweet little fruity brew,
I love you for all that you do...!!!

U n uR friEndShiP

FrIendsHip...
It need no ruLes;
And of course, no graMmar too!
your thOughTs, my friend..
Always hit me freSh as tHe shoWer -
oN new a boRn flOwer..!!
Your shoULders giVEn me
spAce to resT on, for
There wHen my heARt
Was moRE heavy tHan my Mind -
wELl in coNtrAry to the huMan aNaTomy..!??
I Know InsPite grAmmaR mistaKes,
YoU, my frienD is aBle to mAKe ouT
whAt I trY expLainEd Here!
For aLL your siLent WOrds
And auDiBle strength -
My dEar frieNd,
I ThaNk You frOm
The boTTon oF my heArt!!!

Bare with Me!!

I know my English poems are very much worse when compared to my Quite-Ok Tamil poems. However I am thinking of posting few English poems or rather thoughts, which I had scribbled. Forgive me & bare with me for this non-sense J