இரண்டும் கெட்டான் பருவம்..
நல்லது, தீயது;
சரி, தவறு;
எதை பற்றியும் கவலை இல்லா பருவம்..
பிடிக்காதத்தை, பிடித்தவர்களுக்காக,
பிடித்தது போல் பிடிக்காமல் நடிப்பது
என்பது ஒரு கலை..
அந்த கலையில் கை தேர்ந்து,
முதுகலை பட்டம் பெற்றவர் யார்?
வேறு யார்??
நான் தான்..!
பனிரெண்டு வருடங்களாய்
அகர வரிசை முதல், வேதியல் செயல்முறை வரை
மனதிற்க்கு பிடித்த பள்ளியில்
துள்ளி திரிந்து பாடம் கற்ற நான்,
குடும்ப சூழல் காரணமாய்
மேனிலை படிப்புக்காக,
துளி ஆர்வம் இல்லாமல்
வந்து சேர்ந்தேன் இங்கு..
தமிழில் பேசினாலே கொக்கரிக்கும்
பள்ளியில் இருந்து வந்த நான்,
ஆங்கிலத்தில் பேசினால் கேலியாய் சிரிக்கும்
இடத்திற்க்கு வந்து சேர்ந்தேன்..
ஓரிரு பெண்கள் சேர்ந்தாலே
பிரளயம் ஏற்படும் எனில்,
அறுவது மகளிர் படிக்கும் அறையில்
நடுவில் இருந்தும், மூலையில் தள்ளப் பட்டேன்..
மனதில் வெம்பி ஆரம்ப நாட்களை கழித்து,
ஓரிரு தோழிகள் சேர்த்து,
என்னுடன் இரட்டை பிறவி போல்
பிறந்த திமிருடன்,
புதிய மாணாவிக்கே உரிய ஆணவமும் சேர்ந்து
அராஜகம் செய்தேன்..
வாரம் முழுவதும் வகுப்பில் பிறருக்கும்,
ஆசிரியர்கும் தொல்லை கொடுத்து,
படிப்பிலும் சளைக்காது,
தனி ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டேன்..
சனிக்கிழமை விடுமுறையான பள்ளி,
என் வீட்டில் மட்டும் திறந்திருக்கும்..
வீட்டில் நான் பள்ளியில் இருக்க,
நானோ திரையரங்கில்...
ஒரு படம் விடாது,
ஒரு சந்தர்ப்பம் நழுவாது,
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்
நேற்றைய பற்றி சிந்திக்காது,
நாளைய பற்றி கவலை கொள்ளாது,
அனுபவித்து கரைத்தேன்..
யாரையும் மதித்தது இல்லை...
யாருக்கும் பயந்தது இல்லை..
விதிவிலக்கிற்க்ககே விதிவிலக்கு இருக்கும் போது?
நான் மட்டும் என்ன?
என் வாழ்வில் தென்றலாய் வந்தாள்
என்று கவிதைக்கூற்றாக அல்லாமல்,
நட்சத்திரங்களினுள் பௌர்ணமியாய்
காட்சி தந்தாள் - என் அவள்...
அவள்... அவள் தான் இந்த க(வி)தையின் நாயகி,
என் வாழ்வின் நாயகியும் கூட...!!
என் வாழ்வின் நாயகியும் கூட...!!
No comments:
Post a Comment