வாழ்க்கை வாழ்வதற்கே..
ஆம்... வாழ்வதற்கே..
யாருக்காக..??
சிறு வயதில் நண்பர்களுக்காக வாழ்ந்தோம்..
இளமையில் குடும்பத்திற்காக வாழ்ந்தோம்..
முதுமையில் குழந்தைகளுக்காக வாழ்ந்தோம்..
பிறருக்காக வாழ்வதில் உள்ள இன்பம் அறிவோம்,
நமக்காக நாம் வாழும் வாழ்வில் உள்ள
இனிமையை உணர பிறர் விடுவதில்லை
நாமும் முயற்சிப்பதில்லை..
அடிமை தேசமாக வாழ்ந்ததில் தொடங்கி
இன்று அரசியல் தேசமாக வளர்ந்து நின்றாலும்
நம்மால் நமக்கென்று ஒரு வாழ்வை…
வாழ்வை ஏன், ஒரு நாளை கூட வாழ முடிவதில்லை...
யார் செய்த குற்றமென்று பிறரை விரல் நீட்டினாலும்
அதற்கான பதிலை, மற்ற மூன்று விரல்கள்
வெகு அழகாக சொல்கின்றன யார் குற்றமென்று...!
No comments:
Post a Comment