தோழியே...
வகுப்பறையில் ஆசிரியர்கள் மாயமாகி, காதில் கதை பேசினோம்..ஈரைந்து விரல்கள் எப்போதும் ஒன்றாய் துள்ளித் திரிந்தோம்..
பலவீனங்களையும் பலமாக மாற்றிக்கொண்டோம்..
பாசம் மற்றும் அல்லாது பண்பையும் வளர்த்துக் கொண்டோம்...
விவாதங்கள் என்றும் ஓய்ந்ததில்லை, தலைப்புகள் தீர்ந்து போனதில்லை..
தேர்வுகளை வெறுத்ததில்லை, தட்டி கொடுக்க மறந்ததில்லை..
விடுமுறையில் உறவுகளைக் காணச் சென்றதில்லை..
உலகம் சுற்றவில்லை...
பள்ளியே உலகமாய், நமக்கு நாமே உறவாய் ஆனோம்..
பள்ளி நாட்கள் முடிந்து, வெவ்வேறு திசை பிரிந்தும்
பிரியவில்லை அப்போது..
சேர்ந்திருக்க வழிகள் இருந்தும், சேர முடிவதில்லை இப்போது..!
எங்கு தொலைத்தேன் உன்னை என்று,
எண்ணி எண்ணி, என்னை நானே தொலைக்கிறேன் இன்று...!!
No comments:
Post a Comment