Friday, January 20, 2012

என் நிலவே...

கவலைகள் கிலோ என்ன விலை என்பது தெரியாமல்
கல்லூரி நாட்களை களித்த நான்,
பயமா அல்லது கவலையா என்று
புரிந்தும் புரியாமலும் இங்கு நுழைந்த அந்த தினம்..
யாரும் தெரியாமல், எதுவும் அறியாமல்,
இருந்த அந்த சில மணி நேரங்கள்..
நிலவை விடவும் குளுமையாய் என்னைத் தீண்டி,
என்னை உன்புறம் ஈர்தவளே..
நேசித்தேன் உன்னை  என் முன்மாதிரியாக..
நீ என்னுடன் இருக்கும்போது கர்வம் வந்தால்,
நானும் வருவேன் என்று
மற்றவர் உன்னுடன் இருக்கும்போது வருகின்றதுகோவம்!
யாரை நோக?
நீ என் மீது கொண்ட உரிமை,
நான் உன் மீது கொண்ட பாசம் - இதில்
எது வலியது என்ற பட்டிமன்றத்தில் புரிந்து கொண்டேன்:
நிலவும் மதியும் வேறா என்று!

No comments:

Post a Comment