இன்று நம் நாள் என்று
ஆனந்தத்தில் திளைத்து
முகமெல்லாம் முப்பத்தி இரண்டாய்
இருந்த என்னை,
பார்வை மங்குமளவு கண்களில்
கண்ணீர் திரளச் செய்தாயடி - என் தோழி..
எத்தனையோ கஷ்டங்களிலும் கலங்காத என்னை,
உன் கவிதையால் கட்டி போட்டாயடி..
உன்னில் நீ தொலைந்து பார்த்த நாள்
நினைவில் இருந்து விலக,
உன்னை மறுபடியும் நீயாக
காண்கிறேன் என் அகம் மலர..
என் அலமாரியில் பார்க்கிறேன்..
நாம் பரிமாறிய பரிசுகள் யாவும்,
ஒன்பது வருடங்கள் நாம் பகிர்ந்த
அன்பிற்கு முன் நிற்க முடியாமல்
நானி கோணி நிற்கின்றன..
பத்தாவது வருடத்திலும் இம்மியும் மாறாமல்
இருக்கின்றது நம் காதல்..
இது தான் நாம் நமக்கு தரும்
நம் இருவர் தின பரிசு..!!
ஆனந்தத்தில் திளைத்து
முகமெல்லாம் முப்பத்தி இரண்டாய்
இருந்த என்னை,
பார்வை மங்குமளவு கண்களில்
கண்ணீர் திரளச் செய்தாயடி - என் தோழி..
எத்தனையோ கஷ்டங்களிலும் கலங்காத என்னை,
உன் கவிதையால் கட்டி போட்டாயடி..
உன்னில் நீ தொலைந்து பார்த்த நாள்
நினைவில் இருந்து விலக,
உன்னை மறுபடியும் நீயாக
காண்கிறேன் என் அகம் மலர..
என் அலமாரியில் பார்க்கிறேன்..
நாம் பரிமாறிய பரிசுகள் யாவும்,
ஒன்பது வருடங்கள் நாம் பகிர்ந்த
அன்பிற்கு முன் நிற்க முடியாமல்
நானி கோணி நிற்கின்றன..
பத்தாவது வருடத்திலும் இம்மியும் மாறாமல்
இருக்கின்றது நம் காதல்..
இது தான் நாம் நமக்கு தரும்
நம் இருவர் தின பரிசு..!!
No comments:
Post a Comment