Wednesday, January 16, 2013

என் கவிதையே... (பகுதி - 9) ****மீண்டும் உனக்காக****

நான்:
ஆனாலும் உனக்கு இவ்வளவு தற்பெருமை கூடாது..
உன்னை அணு அணுவாய் செதுக்கி நான்
எழுதும் கவிதைகளை எல்லாம்
கொள்ளை அழகென்கிறாயே..!!

நீ:
எழுதுவது நீயாகும் போது
அழகு, கவிதையின் பொருளில் இல்லை;
எழுதும் உன்னிடத்தில் அல்லவா இருக்கிறது??
உன்னை நினைத்தால் எனக்கு
தற்பெருமை என்ன,
தலை கால் கூடத் தெரியாதே..??!!

No comments:

Post a Comment