உலகம் உருண்டை என்று எல்லோரும் சொல்வதை
நான் எப்படி நம்புவது?
நீ ஐந்தடி உருவமாய் அல்லவா உள்ளாய்!!
புகைப்படம் அனுப்பி உள்ளேன் என்றாய்..
அதில் இருந்து இறங்கி வந்து என்னை ஆசையாய்
கட்டிப் பிடிப்பாய் என்று பார்த்தால்,
நீயோ ஒரு கரடி பொம்மையை
கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாய்!!
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு
வந்து நிற்கும் ஒவ்வொரு பேருந்தாய்
நீ எட்டி எட்டிப் பார்க்கும் அந்த
பார்வைக்காகவே நான்
தாமதமாய் வருகிறேன்..
உன் வீட்டுக் கண்ணாடியின் மேல்
எனக்கு கோபம் கோபமாய் வருகிறது..
என்னை விட அதை பார்த்துத் தானே
நீ அதிகம் சிரிக்கிறாய்..!
விடுமுறையிலும் விடாது நாம்
பள்ளி சென்றோம்..
நீ பாடம் படித்தாய்
நான் உன்னை படித்தேன்!
முழு பூசனிக்கையை சோற்றில்
மறைக்க முடியாமல் போகலாம்..
ஆனால் என்னால் நிச்சயம் உன்னை முழுமையாக
என் மனதில் அடக்க முடியும்!
---------------------------------------------------------------
வெளிநாட்டில் யார் யாருக்கோ
மெழுகு சிலை வைத்துள்ளார்கள்..
மெழுகு சிலை வைத்துள்ளார்கள்..
நானோ என் மனதில் ஓர்
அழகு சிலை வைத்துள்ளேன்..
அழகு சிலை வைத்துள்ளேன்..
தெருவிற்கு தெரு 'அழகு நிலையம்' என்று உள்ளதை
சொல் மாற்றம் செய்ய வேண்டும்..
அது உன் வீட்டை அல்லவா குறிக்கிறது??
வகுப்பில் பேய்க் கதை விவரிதது கொண்டிருந்த
அன்று, நீ பயந்து போனாய்..
அந்த நொடி உனை கண்ட நான் தொலைந்து போனேன்..!
No comments:
Post a Comment