Wednesday, July 17, 2013

என் கவிதையே... (பகுதி - 13) - இருவர் தின வாழ்த்து!!

சுதந்திரமாய் சுத்திக் கொண்டிருந்த என்னை
உன் அன்புச் சிறையிலிட்டு ஆகின்றன
வருடங்கள் எட்டு..

எட்டு வருடங்கள்..
எட்டே வருடங்கள் தான்
நீ என்னுள் ஆட்சி புரிகிறாயா?
என்னை அடிமையாக்கி இந்த எட்டு வருடங்கள்
என்னை என்னென்ன செய்தாயடி??

சென்ற வருடம் இதே நேரம்
தொடர் க(வி)தையாய் நான்
உயிர்ப்பித்த என் உன்னை,
இன்றும் அதே காதலோடு உணர்கிறேன்..

உன்னை எந்த மொழியில் வர்ணிப்பேன்?
எந்த வண்ணத்தில் தீட்டுவேன்?
எந்த ராகத்தில் பாடுவேன்?
எந்த உவமையில் போற்றுவேன்?
இவை எதிலும் உன்னை முழுமையாக
அடக்க முடியாமல் திணறித்தான் போகிறேன்..

இந்த ஒரு வருடத்தில் என்
வலப்பெயர் வேண்டுமானால் மாறி இருக்கலாம்
ஆனால் என் உலகின் மையப்புள்ளி
இன்னும் உன்னிடத்தில் தான் உள்ளது..

இருபத்திஓர் நூற்றாண்டுகளின்
கண்டுபிடிப்புகள் எல்லாம்
எனக்கு வீணாகவே தோன்றுகிறது..
உன்னுடன் நான் இருந்த அந்த
பொக்கிஷமான நாட்களை
திரும்பக் கொணரும் ஏதேனும்
Recovery Software இருந்தால்
ஒப்புக் கொள்கிறேன், மனிதனால் முடியாதது
எதுவும் இல்லை என்று..!

அப்படி திரும்பவும் ஒரு முறை..
ஒரு முறையேனும் வாழக் கிடைத்தால்,
என் உயிரெனும் விலையை கொடுத்து
மீட்டு வருவேன் - என் கவிதையை..

என்னவளே, இனிய இருவர் தின வாழ்த்துக்கள்..!!!

1 comment:

  1. இருபத்திஓர் நூற்றாண்டுகளின்
    கண்டுபிடிப்புகள் எல்லாம்
    எனக்கு வீணாகவே தோன்றுகிறது..
    உன்னுடன் நான் இருந்த அந்த
    பொக்கிஷமான நாட்களை
    திரும்பக் கொணரும் ஏதேனும்
    Recovery Software இருந்தால்
    ஒப்புக் கொள்கிறேன், மனிதனால் முடியாதது
    எதுவும் இல்லை என்று..!

    அப்படி திரும்பவும் ஒரு முறை..
    ஒரு முறையேனும் வாழக் கிடைத்தால்,
    என் உயிரெனும் விலையை கொடுத்து
    மீட்டு வருவேன் - என் கவிதையை..

    என்னவளே, இனிய இருவர் தின வாழ்த்துக்கள்..!!!

    By
    Maaya

    ReplyDelete