உன்னை 'டா' என்று அழைப்பதா; 'டீ' என்று அழைப்பதா?
நீ அவளா அவனா என்று கூடத் தெரியாதே..
10 மாதம் கருவில் சுமந்தால் தான் பிள்ளையா?
என் பெண்மையை உயிர்ப்பித்து
என்னுள் 3 மாதங்கள் இருந்துவிட்டு
ஏன் என்னை விட்டுப் பிரிந்தாய்??
உன் இதயத்துடிப்பை நான்
எனதாக எண்ணி இருக்க,
நீயோ உன்னோடு என் உயிரையும்
சேர்த்துக் கொண்டு சென்றாய்..
கண்ணின் மணியாக உன்னை நினைத்த எனக்கு
இன்று கண்ணீர் கூட பாரமானதே..!
No comments:
Post a Comment