Wednesday, October 2, 2013

என் கவிதையே... (பகுதி - 14)

உன்னை பற்றி எழுதும் போது தான்
கவிதை பெண் ஆகிறாள்!
-----------------------------------------------

சீக்கிரம் தூங்கிவிடு மாயா..
உறக்கத்தில் உன் அழகு இரட்டிப்பாவதை
ரசிக்க, எத்தனை நேரம் தான் நானும்
தூங்குவது போல் நடிப்பது???
------------------------------------------------

எல்லோரும் வீட்டில் ஜன்னலை
திறக்கிறார்கள் - காற்றை சுவாசிக்க..
உன் வீட்டிலோ காற்று ஜன்னலைத் திறக்கிறது,
உன்னை சுவாசிக்க..!!
-----------------------------------------------

மனித உடலில் 60% திறவம் நிறைந்திருக்குமாம்..
அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல்
என்னுள் நீ 100% நிறைந்திருக்கிறாயே..
-----------------------------------------------

நீ திருஷ்டி பொட்டு வைக்காதே..
உன் கன்னத்தில் பிறந்ததற்க்காக
அதற்கு எத்தனை திருஷ்டி படும்
என்று உனக்குத் தெரியாது!!
-----------------------------------------------

முள் குத்தும் என்று நீ
மீன் சாப்பிடாததால்
ஏரி குளங்கள் எல்லாம் மீன்களின்
கண்ணீரால் நிறைந்திருப்பதை பார்..!
------------------------------------------------

உன் பக்கத்து வீட்டில் இருக்கும்
கர்ப்பிணிப் பெண்ணின் அருகில் செல்லாதே..
உன்னை காணும் ஆசையில் குறை பிரசவத்தில்
பிறந்து விடப் போகிறது குழந்தை! 

No comments:

Post a Comment