என் சுவாசத்தை உள் இழுத்து கண்கள் திறக்கும் அந்த நொடி,
என் முன் அவள்..
அவள் அழுகையை பிரம்மன் கேட்டால், அவளை ஊமையாகப் படைத்திருப்பான்..
கெஞ்சினாள்.. திட்டினாள்.. வேண்டினாள்..
நான் செவிசாய்க்கவில்லை...!
என் நெஞ்சம் கல்லாய் மாறும் சப்தம் எனக்குக் கேட்கின்றது..
என் மனமும் ஆற்றலும் இடும் சண்டை என்னை குழப்புகிறது..
மறுமுறை கண்கள் திறந்த போது,
என்னை எள்ளி நகைத்த எண்ணங்களையும், ஏறி மிதித்த மனதின் ஓலங்களையும்,
புறந்தள்ளி சாம்பலாக்கினேன்..
என் பணியாட்களை ஏவினேன்:
"அசையாது பிடியுங்கள் அவளை, கட்டுங்கள் அவள் கைகளை" என்று..
மனதை திடமாக்கி அந்த காரியம் செய்தேன்..
அவள் எமனின் நிழல் தொட்டுக் கதறினாள்...
மறு நொடி - எங்கும் மௌனம், எங்கெங்கும் மௌனம்..
குருதியில் சிவந்து நடுங்கும் என் கரங்களில் மட்டும்,
மேகக் குவியலாய், முயல் குட்டியாய், ஒரு பிஞ்சு தெய்வம்!
இப்போது கர்வத்தில் நான் - முதல் பிரசவம் பார்த்த மருத்துவச்சியாய்!!

No comments:
Post a Comment