Friday, June 29, 2012

விடை தெரியவில்லை????


உறக்கம் கலையா சூரியன்...
வெட்கக் சிவப்பில் பனித்துளி...
சோம்பல் முறிக்கும் சிற்சில மனிதர்கள்...
இங்கு தான் என்று தெரியா வண்ணம்,
எங்கோ ஒலிக்கும் பக்திப் பாடல்..
காலம் மாறவில்லை..
மனிதர்கள் மாறவில்லை..
வெளிநாடு செல்லவில்லை...
இருந்தும் இவைகளை ரசித்து ஆகின்றன பல வருடங்கள்..
விடியல் பொழுதின் அனைத்து சந்தோஷங்களும் அப்படியே தான் உள்ளதா??
விடை தெரியாமல் துடிக்கின்றது -
இரவு பணி காரணமாக விடியலை மதியத்தில் காணும் என் மனது...!!

No comments:

Post a Comment